மக்களுக்கு சேவை செய்வதில் அரசு ஊழியர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் என்ன செய்வது? இந்த கொரோனா வந்து 50% அரசு ஊழியர்களை பணிக்கு வரவிடாமல் முடக்கிப் போட்டுள்ளது. அதனால் ஆகாயத்தை முட்டும் அளவிற்க்கு மக்கள் பணிகள் தேங்கி கிடக்கிறது. ஆகவே இந்த வீடியோவில் அனைவரையும் பணிக்கு அழைக்க ஓர் ஆலோசனை மக்கள் முன் வைக்கப் பட்டுள்ளது.
May 20, 2020
100% அரசு ஊழியர்களை லாக்டவுன் காலத்தில் பணிசெய்ய அழைக்க இந்த முறையை பயன்படுத்தலாமே?
April 22, 2020
வீட்டிலிருந்தால் கொரோனா வராது பசி வருமே இந்த அரசாங்கம் என்ன செய்ய போகிறது
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு - திருக்குறள்
திருவள்ளுவர் சொல்லியது மக்களை தெருவில் நிறுத்தி கையேந்த விட்ட அரசுகளுக்கு தெரியுமா?
மனதுக்குள் கண்ணீரும் முகத்தினில் கவலையுமாக இருக்கும் கோடானு கோடி மக்களை அவர்களின் அனைத்து தொல்லைகளுக்கும் பதில் தரப்போவது யார்?
பணமுள்ளவனெல்லாம் சொகுசாய் வாழ்ந்திருக்கையில் ஏழைகளெல்லாம் தெருவில் அலைந்தும், நடந்தும் சாக, நடுத்தர வர்க்கத்தினர் மனதுக்கும் தன்மானத்துக்கும் நடுவில் எதிர்காலத்தை குறித்த அட்சத்தோடு திரிகிறீர்களே! என்றைக்கு நீங்களெல்லாம் உங்களின் நிலைக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று புரிந்து கொள்ள போகிறீர்கள்?
பொய்யான மாயையின் பின் திரிவதை ஒழித்துவிட்டு நிஜத்தை எப்போது பின்தொடருவீர்கள்....???
December 17, 2019
தமிழர் தாயகத்தில் ஈழத்து தமிழர்களுக்கே குடியுரிமை இல்லையா???
உலகம் முழுவது உள்ள தமிழர்கள் தாயகமாக நினைப்பது மற்றும் வரலாற்று ரீதியாகவும் தமிழ்நாடுதான். உலகில் எங்கு தமிழனுக்கு பிரட்சனை என்றாலும் அவர்கள் வர நினைப்பது தமிழ்நாட்டுக்குத்தான்....
அப்படி இருக்கும்போது தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்து தமிழ் சொந்தங்களை தமிழகத்திற்கு வர இயலாதபடி, அவர்களுக்கு குடியுரிமை கிடைக்காமலிருக்க வேறு மாநிலங்களை சேர்ந்த யாரெல்லாமோ சட்டம் இயற்றுவார்களாம்... ஆனால் தமிழர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களவை உறுப்பினர்களும், தமிழகத்தை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர்களும் அதனை ஆதரித்து ஓட்டுப் போடுவார்களாம்! என்னடா கூத்து இது!
அப்போ தமிழனுக்காக பேச நாதியில்லையா... கேவலம் ...அவமானம் ..
சகதமிழனுக்காக பேச வக்கற்று போனோமடா ...வாயடைத்து நிற்கிறோமடா...
ஜல்லிக்கட்டுக்கு போராடி சரித்திரம் படைத்த தமிழர்கள் சக உறவுகளின் உரிமைகள் மறுக்கப்படும்போது கைகட்டி, வாய்மூடி வேடிக்கை பார்ப்பதா?
கையறு நிலையில் தாய்வீட்டிலாவது சென்று வாழமுடியுமா ... என தமிழ்நாட்டுக்கு வரும் உறவுகளை, நம் சொந்தங்களை .. நாடிழந்தவர்களாக்கி , வீடிழந்தவர்களாக்கி, உரிமையிழந்தவர்களாக்கி என்றைக்கும் அவர்களை அகதிகளாக்கி... உட்க்கார வைப்பதற்கான சட்டத்தை இயற்றும் போது நாமனைவரும் வேடிக்கை பார்ப்பதா...வேதனையில் விக்கித்து நிற்பவர்களே என்ன செய்யப்போகிறீர்கள் ?
மனதில் தீப்பந்தங்களாய் எறியும் கேள்விகளுக்கு விடைதான் என்ன?
மானத்தை உயிரெனக் கருதும் தமிழ் சமூகத்திலிருந்து ... மனம் நொந்து பிழைப்புத் தேடி வரும் அவர்களை அரவணைத்து .. ஆதரவு தருவதுதானே நம் தமிழர் மரபு ...
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்தானே நம் தமிழ்நாடு !
இன்றைக்கு பேசவில்லை என்றால் தமிழகம் என்றைக்கும் பேசமுடியாது ..
அரசியல்வாதிகளே! சமூக செயல்பாட்டாளர்களே! குடியிருப்போர் சங்கங்களே! ஆன்றோர்களே! சான்றோர்களே! இளைஞர்களே! மாணவ மணிகளே! அன்பு தமிழக மக்களே! நம் சக தமிழனுக்காய் ஒன்றுபட்டு நில்லுங்கள் ... ஒவ்வொரு தமிழர்களும் புலம்பெயர்ந்து வரும் ஈழத்து தமிழர்களின் குடிஉரிமைக்காய் குரல் கொடுங்கள்!
---- ஜெயசெல்வன்
+91 - 7373630788

May 24, 2019
புதிதாக உருவாகவிருக்கும் மக்களுக்கான அரசியல் கட்சியில் சேர விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்
நீங்கள் சமூகத்தின்மேல் அக்கறை கொண்டவரா?
மக்களுக்காக தொண்டு செய்யவேண்டும் என்று விழைபவரா?
இந்தியாவை ஊழலின் பிடியிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவரா?
ஊழலின் ஆணிவேரையும் அசைத்து அறுத்தெறிய நினைப்பவரா?
அரசியல்….. சாக்கடையில் கிடந்தாலும் எங்களால் அதனை தூர்வாரி சந்தனமாக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவரா?
இந்திய தேசத்தை பொருளாதார வல்லரசாக்க முடியும் என்பவரா?
மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்டவும், மக்களுக்கானஅரசை உருவாக்க நினைப்பவரா?
விவசாயிகளின் பிரட்சனைகளுக்கு, தொழிலாளர்களுக்கு, மக்களின் வாழ்வாதாரங்களுக்கு போராட நினைப்பவரா?
ஏழைகள் இல்லாத இந்தியா, பசி கொண்ட வயிறுகள் இல்லாத இந்தியா, அடிமைகள் இல்லாத இந்தியா, ஏமாற்று அரசியல்வாதிகள் இல்லாதஇந்தியா, சொந்த நாட்டு மக்களின், ஏழைகளின் பணத்தைகொள்ளையடிப்பவர்கள் இல்லாத இந்தியா உருவாகவேண்டும் என்றுநினைப்பவரா?
இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி கொண்ட இந்தியா, அனைவருக்கும் கல்வி, மருத்துவம் இலவசமாய் அளிக்கும் இந்தியாவீடில்லாதவர்களே இல்லாத இந்தியா, ஏழைகளே இல்லாத சாதாரணஜனங்களும் முதலாளிகளாக்கப்பட்ட இந்தியா உருவாகவேண்டும்என்று நினைப்பவரா?
மேலே உள்ள கேள்விகளுக்கு உங்களின் பதில் ஆம் என்றால்நாமெல்லாரும் நண்பர்கள். இந்திய தேசத்தின் பிரஜையான நீங்கள்யாராக வேண்டுனால் இருந்துவிட்டு போங்கள்… உறுதியாய்நாமெல்லாரும் இந்திய தேசத்தின் மாற்றங்களை உருவாக்கப் போகும்விழுதுகள்
பண நாயகத்தை மாற்றி ஜனநாயகத்தை மீட்டெடுக்க
மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து அவர்களிடமேஒப்படைக்க
சமூக ஒடுக்குதல்களிடமிருந்து சமநிலையடைந்த நவீன இந்தியாவைஉருவாக்க
நாளை வாழும் நமது தலைமுறைகள் சந்தோசமாய் வாழ
வாருங்கள் போராடுவோம்… ஒருங்கிணைந்து நின்று
விவேகானந்தர் சொன்னார் நூறு இளைஞ்சர்களைத் தாருங்கள்இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று...
நூறு பேர் நன்றாக வாழ நூற்றி ஐம்பது கோடிப்பேர் உழைக்கும் இந்தபுண்ணிய பூமியில் இந்திய மண்ணில் ஜனநாயகத்தின் பலனைநாட்டுமக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றால் அதற்க்காகநாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நான் மக்களுக்காக போராடஉழைக்க தயாராக உள்ளேன். என்னோடு இணைந்து போராட, நாட்டுக்காக உழைக்க யார் வருகிறீர்கள்?
எழுபது ஆண்டுகளாய் மாறி மாறி ஆண்ட அரசுகள் என்னசெய்திருக்கின்றன மக்களுக்கு?
இனியும் இவர்களால் என்ன மக்களுக்கு கிடைக்கப் போகிறது?
தேர்தல் வந்தால் உறுதி கொடுப்பதும் ஜெயித்து ஆட்ச்சியில் அமர்ந்தால்மக்களின் வாழ்க்கையை வாழ்வாதாரத்தைக் கெடுப்பதும் இவர்களுக்குவாடிக்கைதானே....
இனியும் இவர்களால் என்ன மக்களுக்கு கிடைக்கப் போகிறது...
இனியும் இந்தக் கொள்ளைக் கூட்டங்களை ஏமாற்றுப் பேர்வழிகளைஎத்தனைக்காலம் ஆட்ச்சியில் அமர்த்தி அழகு பார்க்கப் போகிறீர்கள்
சிந்தியுங்கள் மக்களே! எது மக்களுக்குதேவையோ அதை நாமே கட்டியமைப்போம் வாருங்கள் நண்பர்களே!
நான் மக்களுக்காக போராட உழைக்க என்னோடு இணைந்து போராட, நாட்டுக்காக உழைக்க யார் வருகிறீர்கள்? வாருங்கள் நண்பர்களே!
ஜெயசெல்வன் - Cell: 063796 58069
இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் Facebook / Twitter மூலம் இணைந்துவிட்டு phone மூலம் தொடர்பு கொள்ளவும்
Face Book Page Link: https://fb.me/NDPMI