நீங்கள் சமூகத்தின்மேல் அக்கறை கொண்டவரா?
மக்களுக்காக தொண்டு செய்யவேண்டும் என்று விழைபவரா?
இந்தியாவை ஊழலின் பிடியிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவரா?
ஊழலின் ஆணிவேரையும் அசைத்து அறுத்தெறிய நினைப்பவரா?
அரசியல்….. சாக்கடையில் கிடந்தாலும் எங்களால் அதனை தூர்வாரி சந்தனமாக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவரா?
இந்திய தேசத்தை பொருளாதார வல்லரசாக்க முடியும் என்பவரா?
மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்டவும், மக்களுக்கானஅரசை உருவாக்க நினைப்பவரா?
விவசாயிகளின் பிரட்சனைகளுக்கு, தொழிலாளர்களுக்கு, மக்களின் வாழ்வாதாரங்களுக்கு போராட நினைப்பவரா?
ஏழைகள் இல்லாத இந்தியா, பசி கொண்ட வயிறுகள் இல்லாத இந்தியா, அடிமைகள் இல்லாத இந்தியா, ஏமாற்று அரசியல்வாதிகள் இல்லாதஇந்தியா, சொந்த நாட்டு மக்களின், ஏழைகளின் பணத்தைகொள்ளையடிப்பவர்கள் இல்லாத இந்தியா உருவாகவேண்டும் என்றுநினைப்பவரா?
இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி கொண்ட இந்தியா, அனைவருக்கும் கல்வி, மருத்துவம் இலவசமாய் அளிக்கும் இந்தியாவீடில்லாதவர்களே இல்லாத இந்தியா, ஏழைகளே இல்லாத சாதாரணஜனங்களும் முதலாளிகளாக்கப்பட்ட இந்தியா உருவாகவேண்டும்என்று நினைப்பவரா?
மேலே உள்ள கேள்விகளுக்கு உங்களின் பதில் ஆம் என்றால்நாமெல்லாரும் நண்பர்கள். இந்திய தேசத்தின் பிரஜையான நீங்கள்யாராக வேண்டுனால் இருந்துவிட்டு போங்கள்… உறுதியாய்நாமெல்லாரும் இந்திய தேசத்தின் மாற்றங்களை உருவாக்கப் போகும்விழுதுகள்
பண நாயகத்தை மாற்றி ஜனநாயகத்தை மீட்டெடுக்க
மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து அவர்களிடமேஒப்படைக்க
சமூக ஒடுக்குதல்களிடமிருந்து சமநிலையடைந்த நவீன இந்தியாவைஉருவாக்க
நாளை வாழும் நமது தலைமுறைகள் சந்தோசமாய் வாழ
வாருங்கள் போராடுவோம்… ஒருங்கிணைந்து நின்று
விவேகானந்தர் சொன்னார் நூறு இளைஞ்சர்களைத் தாருங்கள்இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று...
நூறு பேர் நன்றாக வாழ நூற்றி ஐம்பது கோடிப்பேர் உழைக்கும் இந்தபுண்ணிய பூமியில் இந்திய மண்ணில் ஜனநாயகத்தின் பலனைநாட்டுமக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றால் அதற்க்காகநாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நான் மக்களுக்காக போராடஉழைக்க தயாராக உள்ளேன். என்னோடு இணைந்து போராட, நாட்டுக்காக உழைக்க யார் வருகிறீர்கள்?
எழுபது ஆண்டுகளாய் மாறி மாறி ஆண்ட அரசுகள் என்னசெய்திருக்கின்றன மக்களுக்கு?
இனியும் இவர்களால் என்ன மக்களுக்கு கிடைக்கப் போகிறது?
தேர்தல் வந்தால் உறுதி கொடுப்பதும் ஜெயித்து ஆட்ச்சியில் அமர்ந்தால்மக்களின் வாழ்க்கையை வாழ்வாதாரத்தைக் கெடுப்பதும் இவர்களுக்குவாடிக்கைதானே....
இனியும் இவர்களால் என்ன மக்களுக்கு கிடைக்கப் போகிறது...
இனியும் இந்தக் கொள்ளைக் கூட்டங்களை ஏமாற்றுப் பேர்வழிகளைஎத்தனைக்காலம் ஆட்ச்சியில் அமர்த்தி அழகு பார்க்கப் போகிறீர்கள்
சிந்தியுங்கள் மக்களே! எது மக்களுக்குதேவையோ அதை நாமே கட்டியமைப்போம் வாருங்கள் நண்பர்களே!
நான் மக்களுக்காக போராட உழைக்க என்னோடு இணைந்து போராட, நாட்டுக்காக உழைக்க யார் வருகிறீர்கள்? வாருங்கள் நண்பர்களே!
ஜெயசெல்வன் - Cell: 063796 58069
இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் Facebook / Twitter மூலம் இணைந்துவிட்டு phone மூலம் தொடர்பு கொள்ளவும்
Face Book Page Link: https://fb.me/NDPMI
Nice Do it , God bless You
ReplyDelete