வீட்டிலிருந்தால் கொரோனா வராது பசி வருமே இந்த அரசாங்கம் என்ன செய்ய போகிறது

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு - திருக்குறள் திருவள்ளுவர் சொல்லியது மக்களை தெருவில் நிறுத்தி கையேந்த விட்ட அரசுகளுக்கு தெரியுமா? மனதுக்குள் கண்ணீரும் முகத்தினில் கவலையுமாக இருக்கும் கோடானு கோடி மக்களை அவர்களின் அனைத்து தொல்லைகளுக்கும் பதில் தரப்போவது யார்? பணமுள்ளவனெல்லாம் சொகுசாய் வாழ்ந்திருக்கையில் ஏழைகளெல்லாம் தெருவில் அலைந்தும், நடந்தும் சாக, நடுத்தர வர்க்கத்தினர் மனதுக்கும் தன்மானத்துக்கும் நடுவில் எதிர்காலத்தை குறித்த அட்சத்தோடு திரிகிறீர்களே! என்றைக்கு நீங்களெல்லாம் உங்களின் நிலைக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று புரிந்து கொள்ள போகிறீர்கள்? பொய்யான மாயையின் பின் திரிவதை ஒழித்துவிட்டு நிஜத்தை எப்போது பின்தொடருவீர்கள்....???

0 comments:

Post a Comment